OTT: வொர்த் வர்மா வொர்த்து.. ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத தரமான திகில் திரைப்படங்களின் சூப்பர் லிஸ்ட்!

 

OTT: வொர்த் வர்மா வொர்த்து.. ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத தரமான திகில் திரைப்படங்களின் சூப்பர் லிஸ்ட்

திகில் படங்களின் தீவிர ரசிகரா நீங்க? உங்களுக்கான சூப்பர் பதிவு தான் இது. என்ன தான் ஃபேண்டஸி படம் வந்தாலும் திகில் படத்துக்கான மவுசு எப்போதும் குறைவதில்லை. அதில் கிடைக்கும் சுவாரசியம், சஸ்பென்ஸ், திகில் வேறு எந்த படத்திலும் கிடைக்காது, இன்னும் சொல்லப்போனால் நம் நிஜ வாழ்க்கையிலும் இம்மாதிரியான அனுபவங்கள் கிடைப்பது அரிதே. இதற்காகவே திகில் படத்திற்கு எப்போதும் மவுசு அதிகமாகவே இருந்து வருகிறது. அதிலும் ஓடிடி தளத்தில் வந்தபின்னர் திகில் படங்களை தேடி தேடி பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நம்மை குலைநடுங்க வைக்கும் திகில் திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 


The wailing: 2016ல் வெளியான தரமான திகில் திரைப்படம் The wailing. அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் ஒரு சிறிய கிராமமே மர்மமான நோயினால் பாதிக்கப்பட்டு ஏராளமான கிராம மக்கள் உயிரிழந்துவிடுகின்றனர். பின்னர் போலீஸ் ஒருவர் இந்த மர்ம நோயிக்கான காரணம் என்ன? அந்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடிக்கிறார். இந்த மிஸ்டரியான திகில் திரைப்படத்தை அமேசான் ப்ரைம், ஜியோ சினிமா ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.



INSIDIOUS: 2010ல் வெளியான சஸ்பென்ஸ் மிஸ்டரி, ஹாரர், திரில்லர் திரைப்படம் INSIDIOUS. தீய சக்திகளிடம் இருந்து கோமாவில் இருக்கும் சிறு குழந்தையை காப்பாற்றும் பெற்றோர்களின் துணிச்சலே இப்படத்தின் கதைக்களம். திகில் நிறைந்த இப்படத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.



PARI: 2018ல் வெளியான ஹாரர், ஃபேண்டஸி, மிஸ்டரி திரைப்படம் PARI. மர்மங்கள் நிறைந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணை தீய சக்திகள் கொல்ல முயற்சிக்கும், அதனை ஹீரோ எப்படி தடுத்து அப்பெண்ணை காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் திகிலான கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.


Comments